எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் நிச்சயமாக 14 நாட்களுக்கு சிறைக்கு செல்வார் என்று சர்ச்சைக்குரிய யூடியுப்பரான சுதத்ததிலகசிறி தெரிவித்துள்ளார்.
தனது யூடியுப் நிகழ்ச்சியொன்றிலேயே சுதத்த திலகசிறி இவ்வாறு கூறியுள்ளார்.
சஜித் பிரேமதாச மீதும் சில குற்றச்சாட்டுகள் உள்ளன என்றும், இதன்படி அவர் கைது செய்யப்பட்டு 14 நாட்களுக்கு சிறைக்கு செல்வார் என்று சுதத்த திலகசிறி குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவதற்கு முன்னர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த போதே அவர் 14 நாட்களுக்கு சிறை செல்வார் என்று தனது யூடியுப் பக்கத்தில் சுதத்த திலகசிறி வெளியிட்டகருத்து, அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்க முன்னரே இவர் எவ்வாறு தீர்ப்பை கூற முடியும் என்றும், இதனால் சுதத்த திலக்கசிறி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறான நிலைமையில் அவரின்கருத்துக்கள் தொடர்பில் சில தரப்பினர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (சி.ஐ.டி.)முறைப்பாட்டை செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் சர்ச்சைக்குரியகருத்துக்களை கூறிவரும் சுதத்த திலகசிறி, விரைவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாசவும் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளமை, எதிர்க்கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது